சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி
22 Jul 2026, 10:15 pm
<p><strong>சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 22 - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள், தனியார் தொழில் நிறுவன பிரதி நிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் கலந்துரையாடல் நடத்தினார். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட புத்தொழில் நிறுவனர்கள், மாணவர் தொழில்முனைவோர், தொழில் வளர் மையங்கள், கல்வி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொழில் முனைவோர் களுடன் உரையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமச்சந்திரன், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக கூடுதல் இயக்குநர் லட்சுமிகாந்தன் மற்றும் முன்னணி வங்கி மேலாளர் செல்வராஜ், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இணை துணைத் தலைவர் ராகுல், வட்டார மைய அலுவலர் ஜிஜின் துரை, தொழில் முனை வோர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
