தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

27 Dec 2025, 6:08 pm
திருப்பூரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
<p><strong>திருப்பூரில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி</strong></p> <p>திருப்பூர், டிச.27- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தன் னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப் &nbsp;பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 2 &nbsp;மற்றும் &nbsp;2 எ முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற 26 தேர்வர்களை &nbsp;முதன்மை தேர்வுக்கு தயார்படுத்த ஊக்கப்படுத்தும் விதமாக &nbsp;காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள், மருத்து வம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, &nbsp;மாணவியர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் &nbsp;நடுத்தர தொழில் &nbsp;நிறுவன சங்கத்தினருடன் வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாரம் ஒருமுறை கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சனியன்று 9 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி தன்னார்வ &nbsp;பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 2 &nbsp;மற்றும் 2 எ முதல் &nbsp;நிலை தேர்வில் வெற்றி பெற்ற &nbsp;26 தேர்வர்களை முதன்மை &nbsp;தேர்வுக்கு தயார்படுத்த ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட &nbsp;ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் கலந்துரையாடி னார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட &nbsp;தேர்வர்களிடம் கல்வியின் அவசியம், உயர்ந்த குறிக்கோள், &nbsp;சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலம், தனித்தி றன்கள் குறித்து கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் &nbsp;சுரேஷ் மற்றும் தேர்வர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.