தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூத்துக் குலுங்கும் காபி மலர்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

30 Mar 2026, 3:40 pm
பூத்துக் குலுங்கும் காபி மலர்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி
<p><strong>பூத்துக் குலுங்கும் காபி மலர்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி</strong></p> <p>சேலம், மார்ச் 28- கடந்த மாதம் ஏற்காட்டில் பெய்த மழை &nbsp;காரணமாக மல்லிகை மலர் போல் பூத்துக் &nbsp;குலுங்கும் காபி மலர்களால், விவசாயிகளி டையே மகிழ்ச்சியையும், சுற்றுலாப் பயணி களின் கண்களுக்கு விருந்தாகவும் அமைந் துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப் படும் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காபி &nbsp;விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காபி தமிழகம் &nbsp;மற்றும் அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி &nbsp;வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. ஏற்காட்டில் விளையும் காபியின் சுவை அதிக அளவில் உள்ளதால் வெளிநாடு களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கு கிறது. இதனால் ஏற்காடு காபி வெளிநாடு களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏற் காட்டில் காபி மற்றும் மிளகு முக்கிய விவ சாயமாக உள்ளது. சில்வர் ஓக் மரங்களுக்கு &nbsp;இடையே ஊடுபயிராக காபி பயிரிடப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 2000 ஹெக்டர் பரப்பளவில் காபி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் வருடம் ஒருமுறை மட்டும் இந்த காப்பி அறுவடை நடைபெறுகிறது. இந் நிலையில், கடந்த மாதம் ஏற்காட்டில் பெய்த &nbsp;திடீர் மழை காரணமாக ஏற்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள காபி செடிக ளில் தற்போது காபி பூ பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது. இது ஏற்காடு விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. ஏற்காடு மலை பாதை மற்றும் ஏற்காடு &nbsp;சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ &nbsp;போல் காபி மலர்கள் பூத்துக் குலுங்குகி றது. ஏற்காடு மலை பாதையில் பூத்துக் குலுங் கும் காபி மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைவதுடன் இந்த &nbsp;பூக்களிள் கமழும் வாசம் சுற்றுலாப் பயணி களுக்கு அருமையான கொடையாக அமைந் துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.