மின் கம்பி உராய்வால் கருகிய தென்னை: நிவாரணம் வழங்கல்
11 Jun 2026, 11:11 pm
<p><strong>மின் கம்பி உராய்வால் கருகிய தென்னை: நிவாரணம் வழங்கல்</strong></p><p>உடுமலை, ஜூன் 11- மடத்துக்குளம் வட்டம், வஞ்சிபுரம் கிராமத்தில் தனியார் காற்றாலையின் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில், விவசாயி நாயகம் என்பவருக்குச் சொந்தமான 80 தென்னை மரங்கள் கருகி சேதமடைந்தன. இப்பாதிப்பு குறித்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த திங்களன்று அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில், வியாழனன்று மடத்துக் குளம் வட்டாட்சியர் குணசேகரன், பாதிக்கப்பட்ட விவசாயி நாயகத்திடம் புதிய தென்னங்கன்றுகள் நட வும், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கவும் முதற்கட்ட மாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் தொடர் முயற்சிகள் மற்றும் போராட்ட அறிவிப்பின் விளை வாக இந்த நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது விவசாயிகள் சங்க மடத்துக் குளம் தாலுகா தலைவர் வீரப்பன், துணைத் தலைவர் தர்மராஜ், துணைச் செயலாளர் கணேஷ், மற்றும் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தயானந் தன், சிவராஜ், மனோகரன் ஆகியோர் உடனிருந்த னர்.</p>
