தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்னை மரங்கள் தீக்கிரை: நிவாரணம் வழங்க கோரிக்கை!

7 Jun 2026, 12:13 am
தென்னை மரங்கள் தீக்கிரை: நிவாரணம் வழங்க கோரிக்கை!
<p><strong>தென்னை மரங்கள் தீக்கிரை: நிவாரணம் வழங்க கோரிக்கை!</strong></p><p><strong>தென்னை மரங்கள் தீக்கிரை: நிவாரணம் வழங்க கோரிக்கை!</strong>விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் அருகே உள்ள தூங்காவி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவருக்கு சொந்தமான தென்னை தோப்பில், திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தோப் பில் நடவு செய்யப்பட்டு 3 ஆண்டு கள் வளர்ந்திருந்த 80-க்கும் மேற் பட்ட தென்னங்கன்றுகளும், அங்கி ருந்த சொட்டுநீர் பாசன பி.வி.சி குழாய்களும் முற்றிலும் எரிந்து சாம் பலாகின. தனியார் நிறுவனங்கள் காற்றாலையிலிருந்து மின்சா ரத்தை கொண்டு செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளின் உராய்வு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலறிந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மடத்துக் குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன், தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கத் தலைவர் சிவராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சம் பவ இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும் பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி னர். மேலும், இது குறித்து வட்டாட் சியர், வேளாண்மைத் துறை மற் றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை விபத்து நடந்த தோப்பிற்கு வரவ ழைத்து நேரில் ஆய்வு செய்ய வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்க ளின் அலட்சியப் போக்கே இந்த விபத்திற்கு காரணம். பாதிக்கப் பட்ட விவசாயக் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, ஜூன் 7-ஆம் தேதி ஞாயிறன்று மடத்துக்குளம் வட் டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெறும். இதில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் திர ளாக கலந்து கொள்வர் என தெரி வித்தனர். மேலும், திருப்பூர் மாவட்ட ஆட் சியர் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவ சாயிக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டும் எனவும், மடத்துக்குளம் பகுதியில் பெரும்பாலான மக்கள் தென்னை விவசாயத்தையே நம்பியுள்ள தால், இனிவரும் காலங்களில் இது போன்ற மின் விபத்துகள் நேரா மல் தடுக்க மின்வாரியமும் மாவட்ட நிர்வாகமும் உரிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.