தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேங்காய் மட்டை கொள்முதல் நிறுத்தமா? வதந்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் கண்டனம்!

29 Sept 2026, 11:19 pm
தேங்காய் மட்டை கொள்முதல் நிறுத்தமா?  வதந்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் கண்டனம்!

தேங்காய் மட்டை கொள்முதல் நிறுத்தமா? வதந்திக்கு தென்னை விவசாயிகள் சங்கம் கண்டனம்!

உடுமலை, செப்.29-அக்.1 ஆம் தேதி முதல் தேங்காய் உரி மட்டை கொள்முதல் நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் உள்ளிட்டசமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற செய்திகளுக்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த வதந்தி, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னை மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார், பித் உள்ளிட்ட உப பொருட்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச சந்தையிலும்நல்ல வரவேற்பும் நிலையான விலையும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கொள்முதல் நிறுத்தப்படுவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவது, விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு மட்டையை கொள்முதல் செய்து இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டும் சதியோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட கடுமையான வறட்சி, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலால் தென்னை விவசாயிகள் மிககடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். இதுதவிர, தென்னை சாகுபடிக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், சொட்டுநீர்ப் பாசன கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்களின் விலையும் மும்மடங்குஅதிகரித்துள்ளது. பராமரிப்புச் செலவு விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள அதேவேளையில், தென்னைமகசூல் பெருமளவு சரிந்துள்ளது. தென்னை மரங்களை பராமரிப்பதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேங்காயின் விலையும் சந்தை நிலவரம் மற்றும் மட்டையின் விலையைப் பொறுத்து மாறுபடும் சூழல் உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், ”01.10.2026 முதல் தேங்காய் மட்டை கொள்முதல் நிறுத்தப்படும்” என்ற போலி செய்தி விவசாயிகள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், சந்தையில் செயற்கையான விலை வீழ்ச்சியையும் உருவாக்கும் அபாயத்தை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பரமசிவம் கூறுகையில்: ”எந்தவித முகவரியும்ஆதாரமும் இன்றி சமூக வலைதளங்களில் இத்தகைய போலிச் செய்திகளை பரப்புவது மன்னிக்க முடியாத துரோகமாகும். கடுமையான நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் நபர்கள் மீது காவல்துறைமற்றும் இணைய குற்றப் பிரிவு மூலம் உடனடியாக விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்னை மற்றும் அதன் உப பொருட்களுக்கு நியாயமான சந்தை விலை கிடைப்பதைஉறுதி செய்ய தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், பாசன வசதி, இடுபொருட்கள் மானியம்மற்றும் தென்னை சார்ந்ததொழிற்சாலைகளை ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலைமண்டலங்களில் ஊக்குவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.