தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை தென்னை விவசாயிகள் போராட்டம்

yesterday
தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை தென்னை விவசாயிகள் போராட்டம்

தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை தென்னை விவசாயிகள் போராட்டம்

விருதுநகர், ஜூன் 22- தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் அமுல்ராஜ் முன் னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநி லத் தலைவர் அ.விஜயமுருகன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.60, உரிக்காத தேங் காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.30 மற்றும் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.180 என அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், தென்னை மரங்களைத் தாக் கும் நோய்களை கட்டுப்படுத்த அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அரசே நேரடி யாக கொள்முதல் செய்து பொதுவிநியோ கத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களும் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் அப்பாஸ், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் முருகன், பாண்டி, தங்கவேல், மும் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் மாவட்டத் தலை வர் சி.சிவானந்தம் தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி. கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் பி.மரியகுணசேகரன், மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.வி.சுவானி, பி.கோவிந்த ராஜ், கே.சுந்தரம், மாவட்டத் துணைச் செய லாளர்கள் ஜி.கதிர்வேல், பி.ஆறுமுகம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாநிலத் துணைச் செயலாளர் எம்.முத்துராமு நிறை வுரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.முனி யசாமி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.