தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வறட்சியால் பாதிப்பு: இழப்பீடு வழங்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

49 minutes before
வறட்சியால் பாதிப்பு: இழப்பீடு வழங்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிப்பு: இழப்பீடு வழங்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு, அக்.13-வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஈரோடு, ஏ.எம்.காதர் நினைவகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.விஜயமுருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் துளசி நாராயணன், மாநில நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வம், பி.ஜி.கோபிநாத், ஸ்டாலின் மணி, ஸ்டாலின்பழனிசாமி, பரமசிவம் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், எல் - நினோ தாக்கத்தால்தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வற்றிபோகின. அனைத்து மாவட்டங்களிலும் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. பல லட்சம் மரங்கள் காய்ப்புத் திறனைஇழந்து நிற்கிறது.

ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம், தற்போது வறட்சியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் முறையான கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கான முறையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியமும், மாநில அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.