முந்தய பக்கம்

தென்னை விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு

11 Dec 2025, 5:47 pm
தென்னை விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு
<p><strong>தென்னை விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு</strong></p> <p>நாமக்கல், டிச.11- தென்னை வளர்ச்சிக்கு பயன் படும் உரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் நாமக்கல் மாவட்ட மாநாடு வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கம் நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு ஜேடர்பாளையத்தில் தனி யார் மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, மாவட்ட அமைப்பாளர் ஜெ.கிருஷ் ணன் தலைமை வகித்தார். தமிழ் நாடு பால் உற்பத்திப்பாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.ஜோதி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாரா யணன் துவக்கவுரையாற்றினார். பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் தங்கரத்தி னம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வேலாயு தம். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், ஒன்றிய அர சின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, மஞ்சள் வாடல் நோய், கேர்ள் &nbsp;வாடல் நோய், வேர் புழு, கருந் தலை புழு, ஊசி புழு ஆகிய நோய் களை கட்டுப்படுத்த உரிய ஆய்வு களை மேற்கொண்டு மருந்துகள் வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சிக்கு பயன்படும் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் மானியத்தில் வழங்க வேண்டும். தேங்காய் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவராக ஆர். குழந்தைவேலு, செயலாளராக ஜே. கிருஷ்ணன், பொருளாளராக மொளசி கே. பூபதி மற்றும் 31 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தென்னை விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத ணன் நிறைவுரையாற்றினார். மூர்த்தி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram