ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த தென்னை விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்
9 Dec 2025, 4:25 pm

ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த தென்னை விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை, டிச. 9- தென்னை சார்ந்த புதிய தொழில் கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த அரசு உதவ வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு, தொண்டாமுத்தூர் ஒன்றி யம், ஆலந்துறை கள்ளிபாளையத் தில் செவ்வாயன்று மாவட்டத் தலை வர் ஜி. ராஜா தலைமையில் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் காளப்பன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே. வீராசாமி வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி வேலை அறிக்கையையும், பொருளாளர் ஜெ.ரவீந்திரன் வரவு செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர். மாநி லச் செயலாளர் எ.விஜயமுருகன் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார். இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ஆர்.பழனிசாமி, அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரை சாமி மற்றும் என். ஆறுச்சாமி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். தென்னை விவசாயிகளுக்கு மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் தென் னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை, மஞ்சள் வாடல் நோய், கேரள வாடல் நோய், வேர்ப்புழு, கருந்தலைப்புழு, ஊசிப்புழு உள் ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மருந்துகள் வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சிக்கு உதவும் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் மானியத்தில் வழங்கப் பட வேண்டும். தென்னை சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்க வும், ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தவும் அரசு உதவ வேண்டும். சிறந்த இயற்கை உரமாக விளங்கும் தென்னை நார் கழிவைப் பயன் படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக எ.காளப்பன், செயலாளராக ஸ்டாலின் பழனிசாமி, பொருளாள ராக ஜெ.ரவீந்திரன் மற்றும் துணை நிர்வாகிகளாக சி.சபரீஸ்வரன், எஸ்.கே. வீராசாமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் உரையாற்றினார். முடிவில் என். ராஜாமணி நன்றி கூறினார்.