தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்னை மரங்களை பாதிக்கும் நோய் தாக்குதல்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் தீர்வு காண வலியுறுத்தல்

9 Dec 2025, 4:25 pm
தென்னை மரங்களை பாதிக்கும் நோய் தாக்குதல்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் தீர்வு காண வலியுறுத்தல்
<p><strong>தென்னை மரங்களை பாதிக்கும் நோய் தாக்குதல்களுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் தீர்வு காண வலியுறுத்தல்</strong></p> <p>உடுமலை, டிச.9- தென்னை விவசாயிகளுக்கு பெரும் &nbsp;பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வரும் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்கு தலுக்கு ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் உரிய தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடுதான் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 17 மாவட்டங்க ளில் நீண்ட காலப் பயிரான தென்னை &nbsp;பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்டம் பொள் ளாச்சி போன்ற பகுதிகளில் தென் னையே பிரதானப் பயிராக உள்ளது. ஒரு மரத்திற்கு ஓர் ஆண்டுக்கு 150 &nbsp;காய்கள் வரை கிடைக்கும். இந்நிலை யில், கடந்த 9 ஆண்டுகளாக ரூகோஸ் &nbsp;வெள்ளை ஈ, கேரள வாடல் நோய், தஞ் சாவூர் வாடல் நோய் போன்ற பல்வேறு &nbsp;நோய்களால் தென்னை மரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தென்னை உற்பத்தி நான் கில் ஒரு பங்காகக் குறைந்து ஆண்டுக்கு &nbsp;40 காய்கள் மட்டுமே கிடைக்கிறது. இப் பிரச்சினையால் விவசாயிகள் பல ஆயி ரம் தென்னை மரங்களை வெட்டி அப்பு றப்படுத்தி வருகிறார்கள். தென்னை விவசாயிகளின் இந்த இக்கட்டான நிலை குறித்து பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி பாரா ளுமன்றத்தில் பேசியுள்ளார். அதை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங் கம் வரவேற்கிறது. &nbsp;ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி &nbsp;வாரியம் மற்றும் தென்னை ஆராய்ச்சி &nbsp;நிலையங்கள் தொடர்ந்து தென்னை &nbsp;மரங்களைப் பாதித்து, விவசாயிக ளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத் தும் நோய்களை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப் பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழுவின் &nbsp;சார்பாக &nbsp;கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் சு.பரமசிவம் தெரிவித் தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.