பாஜகவை முந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 5 நாட்களிலேயே ஒன்றரை கோடி பாலோயர்ஸ் ; 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும் சேர்ந்தனர்
21 May 2026, 9:20 pm

பாஜகவை முந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 5 நாட்களிலேயே ஒன்றரை கோடி பாலோயர்ஸ் ; 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும் சேர்ந்தனர்

புதுதில்லி மே 15 அன்று மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரிய, வழக்கறி ஞரின் மனு தொடர்பான விசார ணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்,”வேலையில்லாத சில இளை ஞர்கள், சமூக ஆர்வலர்கள் போல செயல் பட்டு கரப்பான்பூச்சி போல அமைப்பை தாக்கு கின்றனர்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

மக்களின் கருத்துகளுக்கும், கருத்துரி மைக்கும் மதிப்பளிக்க வேண்டிய உச்சநீதி மன்றத்தின் தலைமை பதவியில் இருப்பவரே, இளைஞர்களை

கரப்பான் பூச்சி

களுடன் ஒப்பிட்டது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கண்டனம் குவிந்தன. சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள் அனல் பறந்தன. இதனால் பதற்றமடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,”தான் பொது வாக இளைஞர்களை சொல்லவில்லை. வேலை யில்லாத இளைஞர்களைத்தான் அப்படி குறிப்பிட்டேன். கரப்பான் பூச்சிகள் போன்ற சமூக ஒட்டுண்ணிகள் என்று கூறினேன்” என விளக்கம் அளித்தார். கரப்பான் பூச்சி இந்நிலையில், தலைமை நீதிபதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் வர்ணனையாளராக இருக்கும் அபிஜித் தீப்கே தனது சமூக வலைதளத்தில், “அனைத்து கரப்பான் பூச்சி எல்லாம் ஒன்று சேர்ந்தால் நிலைமை என்னவாகும்” என பதி விட்டிருந்தார். இந்த பதிவுக்கு பிரம்மாண்டமாக ஆதரவு பெருகியது. இதன் தொடர்ச்சியாக “காக்ரோச் ஜனதா கட்சி (கரப்பான் பூச்சி கட்சி - cockroach janta party)” மே 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அபிஜித் தீப்கே தான் கரப்பான் பூச்சி கட்சி உருவாக்கினார்.

பாஜகவை ஓவர்டேக் செய்த கரப்பான் பூச்சி

டுவிட்டர் எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ‘கரப்பான் பூச்சி கட்சி (cockroach janta party - @Cock roach4India)’ என்ற பெயரில் இருக்கும் இந்த கட்சி பாஜகவை ஓவர்டேக் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் @cockroachjantaparty என்ற ஹேண்டிலில் இயங்கி வரும் இந்தக் கணக்கு, வியாழனன்று 15 மில்லியன், அதா வது 1.5 கோடி பாலோயர்களை தாண்டியது. வெறும் 56 போஸ்ட்களை மட்டுமே போட் டுள்ள இந்த இணைய கட்சி, பாஜகவின் அதி காரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே ஓவர்டேக் செய்து மோடி - அமித் ஷாவுக்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இப்போது இந்தியாவிலேயே அதிக பலோயர்ஸ் கொண்ட அரசியல் பக்க மாக இந்த கரைப்பான் பூச்சி ஜனதா உள்ளது. காங்கி ரஸ் 13.2 மில்லியன் பாலோயர்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. பாஜக 8.7 மில்லியன் பாலோயர்கள் உடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டு மின்றி முகநூல், டுவிட்டர் எக்ஸ் பிரிவுகளிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிக உறுப்பினர்க ளைக் கொண்ட பிரபல கட்சியாக உருவெடுத் துள்ளது. குறிப்பாக கரப்பான் பூச்சி கட்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அக்கட்சியில் இணைந்துள்ளனர் என்று செய்திகள் வெளி யாகியுள்ளன.

முடக்கம் செய்யப்பட்ட பின்பும் மீண்டெழுந்த கரப்பான் பூச்சி மதச்சார்பின்மை, சோசலிசம், ஜன நாயகம், சோம்பேறி ஆகிய வற்றை கொள்கையாக அறிவிக் கப்பட்டுள்ள இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் எக்ஸ் பக்கம் வியாழனன்று முடக் கப்பட்டது. யார் முடக்க கோரிக்கை வைத்தனர் என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. எனினும் ‘கரப்பான் பூச்சி திரும்பிவிட்டது (Cockroach is back)’ என்ற புதிய பக்கத்தைத் தொடங்கி யுள்ளார்அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே. முடக்கத்திற்குப் பின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பாலோயர்ஸ் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறி வரு கிறது. ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள். எம்எல்ஏக்கள் என அரசியல் தலைவர்க ளும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வரு கின்றனர் என்ப0து குறிப்பிடத்தக்கது.