தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடிய ‘கரப்பான் பூச்சிகள்’ தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு முழக்கம்!

6 Jun 2026, 9:11 pm
தில்லி போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடிய ‘கரப்பான் பூச்சிகள்’ தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு முழக்கம்!

தில்லி போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடிய ‘கரப்பான் பூச்சிகள்’ தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு முழக்கம்!

இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்பு

புதுதில்லி, ஜூன் 6- இணையதள அரசியல் இயக்கமாக உருவெடுத்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party - CJP) முதன்முறையாக தலைநகர் புதுதில்லி யில் மாபெரும் போராட்டத்தை நடத்தி, அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறு வனர் அபிஜித் தீப்கே, அறிவிப்பை ஏற்று தில்லி ஜந்தர் மந்தரில், சனிக்கிழமை (ஜூன் 6) அன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் - மாணவர்கள் திரண்டனர்.

அவர்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் கசிவு, பல்வேறு போட்டித் தேர்வுகளில் குளறுபடி என இந்திய நாட்டு மாணவர்கள் - இளைஞர் களின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளி யிருக்கும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடி யாக பதவி விலக வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

காகித கரப்பான் பூச்சி முகமூடி களை அணிந்தபடி, துண்டுப் பிரசுரங் களையும், புத்தகங்களையும் ஏந்திய இளைஞர்கள், தங்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு, ஒன்றிய ஆட்சியா ளர்கள் தரும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்விகளை முன்வைத்தனர்.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாண வர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோர் களும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டத்தில் திரண்டனர். இளம் தொழில் முனைவோரும் பலர் பங்கேற்றனர். இந்திய கல்வி முறை குறித்த கவ லைகளே தங்களை இந்த ஆர்ப்பாட் டத்திற்கு அழைத்து வந்ததாக அவர்கள் கூறினர்.

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளைச் சுற்றியுள்ள தொடர்ச்சியான சர்ச்சை கள், முடிவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகள், ஆட்சி யாளர்களின் பொறுப்புணர்வின்மை ஆகியவற்றால், தற்போதைய தேர்வு அமைப்பின் மீது தாங்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர்கள் தெரி வித்தனர். இளைஞர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புப் பிரச்சனைகளில் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் மீது தாங்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக வும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த காவல்துறை, தில்லியின் பல்வேறு பகுதிகளில், துணைராணுவப் படையினருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு கெடுபிடி களை ஏற்படுத்தியிருந்தனர். எனினும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அதி காலை முதலே இளைஞர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். போராட் டம் முடிவடையும் வரை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலை யத்தில், டாக்டர் அம்பேத்கரின் சுய சரிதை புத்தகத்தை ஏந்தியபடி வந்தி றங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனரும் 30 வயதேயான இளை ஞருமான அபிஜித் தீப்கே, தமது ஆதர வாளர்களை ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து, போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தி யில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றும் உரையாற்றினார்.

‘ஆட்சியாளர்களால் எங்களைத் துடைத்தெறிய முடியாது!’

“இந்த நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் தங்களை விற்று விடவில்லை, (Lekin is desh ka chatra, yuva nahi bika hai)” என்று அபிஜித் தீப்கே போராட்டத்தில் கூறியபோது, கைத்தட்டல்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர், “தோழர்களே, இது மிக நீண்ட போராட்டம் ஆகும். அமைச் சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சமூக வலைதளம் மூலம் நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு செவி கொடுக்காத வர்கள், நமது பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது, ஹேக் செய்வது (hacking) உள்ளிட்ட நட வடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நமது பதிவுகளை வேண்டு மானால் நீக்கலாம். ஆனால், போராட்டக்களத்திலிருந்து துடைத் தெறிய முடியாது” என்றார். ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டத்தில், கல்வி சீர்திருத்தவாதியும், பருவ நிலை ஆர்வலருமான சோனம் வாங்சுக், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) சட்டமன்ற உறுப்பி னர் ரோஹித் பவார், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், மாண வர்கள், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.