தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை’ ஹேக் செய்யக் கூறியதா மோடி அரசு? நாடு முழுவதும் போராட்டம் வெடிக்க வாய்ப்பு

23 May 2026, 9:35 pm
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை’ ஹேக் செய்யக் கூறியதா மோடி அரசு? நாடு முழுவதும் போராட்டம் வெடிக்க வாய்ப்பு

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை’ ஹேக் செய்யக் கூறியதா மோடி அரசு? நாடு முழுவதும் போராட்டம் வெடிக்க வாய்ப்பு

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற இணைய தள கட்சி இந்தியா மட்டு மின்றி உலக அளவில் பிரபல மாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கரப் பான்பூச்சி கட்சி பின்னுக்குத் தள்ளி புதிய அரசியல் கவ னத்தை ஈர்த்து வருகிறது. 2 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்பவர்களாக உள்ளனர். அனைவரும் இளைஞர்கள். உறுப்பினராக பதிவு செய்ய 3 லட்சம் பேர் முன்வந்துள்ளனர். இதனால் கரப்பான்பூச்சி கட்சியை கண்டு ஒன்றிய பாஜக அரசு மிரண்டு போயுள்ளது. முக நூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எக்ஸ் நிறுவனங்க ளிடம் கூறி, கரப்பான்பூச்சி கணக்குகளை நீக்க உத்தர விட்டது. கரப்பான்பூச்சி கண க்குகளை நீக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு 2 மடங் காகப் பெருகி வருகிறது.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய, பழைய மற்றும் சமூக வலை தள, இணைய தள கணக்கு களை மர்மநபர்களால் ‘ஹேக்’ (தகவல் திருட்டு, செயல்பாடு நிறுத்தம்) செய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் உத்தரவின்றி கரப் பான்பூச்சி கட்சியின் கணக்கு களை யாரும் ஹேக் செய்ய வாய்ப்பில்லை என குற்றச் சாட்டுகள் கிளம்பியுள்ளன.

கரப்பான்பூச்சிகள் சாகாது

இத்தகைய சூழலில், கரப் பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, “கரப்பான் பூச்சி கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் எக்ஸ் தளத்தை தவிர்த்து இதர அனைத்து சமூக வலைதளங்களும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளன. எங்களது இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்க ளாக இணைந்திருந்தனர். அந்த இணையதளமும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதி கார நடவடிக்கை ஆகும்.

இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்க ளது கோரிக்கை. கட்சியின் எந்தவொரு சமூக வலை தள கணக்கும் எங்கள் கட்டுப் பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்தப் பதிவு களையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. நாங்கள் புதிய வடிவில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

போராட்டம்

கடந்த 3 நாட்களாக தில்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதி களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் என்று கூறி போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இதனை பாஜக ஆதரவு ‘கோடி மீடியா’ ஊடகங்கள் புறக்கணித் துள்ளன. இதனால் பெரிய ளவில் செய்தியாக வர வில்லை. தற்போது ‘கரப் பான்பூச்சி ஜனதா கட்சியை’ மோடி அரசு தான் ஹேக் செய்யக் கூறியதாக செய்தி கள் வேகமாக பரவி வருவ தால், போராட்டம் தீவிரம டைய வாய்ப்பு உள்ளதா கச் செய்திகள் வெளியாகி யுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.