முந்தய பக்கம்

ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்!

20 Jun 2026, 4:05 pm
ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்!

ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட், கியூட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தில்லி ஜந்தர் மந்தரில் முதன்முதலாக போராட்டத்தை துவங்கினர்.

இதைத்தொடர்ந்து புனே, லக்னோ, ஜெய்பூர், பெங்களூரு என இந்தியாவின் பல நகரங்களில் போராட்டம் பரவியது. தொடர்ச்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகும் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்போது வரை பதவி விலகவில்லை.

இதனையடுத்க்து, ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது அதில் அனைத்து இந்தியர்களும் கலந்து கொண்ட வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram