தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூலை 20இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி - கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

9 Jul 2026, 2:35 pm
ஜூலை 20இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி - கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

வரும் ஜூலை 20-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

நீட், கியூட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 28-ஆம் தேதி முதல் கல்வியாளரும், சமூக செயல்பாட்டாளருமான சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2026 தொடங்கும் நாளான ஜூலை 20 அன்று, தில்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சோனம் வாங்சுக் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், இந்தியாவின் தேர்வு முறையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் தோல்விகளால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என சி.ஜே.பி கேட்டுக்கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.