தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புது இயக்கத்தை அறிவித்த காக்ரோச் ஜனதா கட்சி

7 Aug 2026, 9:50 pm
புது இயக்கத்தை அறிவித்த காக்ரோச் ஜனதா கட்சி

புது இயக்கத்தை அறிவித்த காக்ரோச் ஜனதா கட்சி

வரும் நாட்களில் நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கை இயக்கம், பொது மக்களுடனான கலந்துரையாடல் மற்றும் (அமைப்பு) விரிவாக்கத் திட்டம் என ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) அடுத்த கட்டநடவடிக்கைகளுக்குத் தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் முதல் தேசிய செயற்குழு கூட்டம், சத்ரபதி சம்பாஜிநகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவிற்கு பிறகு வியாழக்கிழமையன்று அவ்வமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்தார்.

‘மக்கள் என்ன பேசுகிறார்கள்?’ என பொருள் கொண்ட வகையில் ‘கியா போல்டி பப்ளிக்’ (Kya Bolti Public) என்ற முன்னெடுப்பை செப்டம்பர் 1 முதல் தொடங்குவதாக சிஜேபி அறிவித்துள்ளது. அதற்கான திட்டப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த இயக்கம் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாமானிய மக்களின்கருத்துகளுக்குச் செவிசாய்க்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது அமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்ட ‘மக்களிடம் நிதிதிரட்டும்’ (crowd-funding) முயற்சியையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. கல்விச் சீர்திருத்தங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு, தேர்தல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்க ளையும் முன்னிலைப்படுத்தி, அரசு அமைப்புகள் மற்றும்ஊடகங்களின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்தவும் இவ்வமைப்பு தொடர்ந்து செயல்படும் என அவர்கள்கூறியுள்ளனர்.

ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தின் வெற்றி நாடு முழுவதும் இளம் தலைமுறையினரிடமும் மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இளைஞர்களுடன் நேரடியாக உரையாடவும், ‘இளைஞர்சீர்திருத்த சாசனத்தை’ (Youth Reform Charter) உருவாக்கவும் நாடு முழுவதும் பயணம் செய்யப்போவதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இந்த சாசனமானது முழுமையான கல்விச் சீர்திருத்தம், கல்வியை வேலைவாய்ப்போடு இணைப்பது, அரசு அமைப்புகளின் பொறுப்புக்கூறல் மற்றும் ஒற்றுமை மற்றும் கூட்டணிகள் என நான்கு முதன்மைத்தூண்களை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஜேபி உருவான பிறகு நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனஅவர்கள் முன்வைத்த அறிக்கையின் முதன்மை நோக்கம் நிறைவேறியது. இந்நிலையில், அவ்வமைப்பு அடுத்து என்ன செய்யப்போகிறது, அது கலைக்கப்படுமா அல்லது போராட்டத்தைதீவிரப்படுத்துமா, அரசியல் கட்சியாக மாறுமாஎன்று கேள்விகள் எழுந்து வந்தன.

தங்கள் போரா ட்டம் அரசியல் தன்மையைக் கொண்டிருந்தாலும், சிஜேபி ஒருசமூக அமைப்புதான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதில் சொல்லும் வகையில் தற்போதைய சூழலில் தேர்தலில் போட்டியிடாமல்,அரசின் தவறுகளைசுட்டிக்காட்டி ஒரு அழுத்தத்தை உருவாக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படப் போவதாக அவ்வமைப்பினர்தெரிவித்துள்ளனர்.

பதவிகளுக்காக போட்டியிடும் மற்றொரு அரசியல் கட்சி இந்தியாவிற்குத் தேவையில்லை. அரசியல் சாசனவிழுமியங்களைப் பாதுகாக்கவும், வெளியிலிருந்தே கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தவும் சித்தாந்தங்களைக்கடந்து மக்களை ஒன்றுபடுத்தும் தளராத இயக்கமே நாட்டிற்குத் தேவை என்று சிஜேபி அமைப்பு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10-12 ஆண்டுகளில் இந்த அரசு மக்களின் மனதில் உருவாக்கிய பயம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

ஜந்தர் மந்தரில் நடந்தபோராட்டம் மாணவர்களை மட்டுமின்றி வேலையற்ற இளைஞர்களையும் ஈர்த்துள்ளது. வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினை. அதை நாடு தழுவிய பிரச்சனையாக மாற்றுவோம். கல்விச்சீர்திருத்தங்களுக்காக குரல் எழுப்புவோம். பள்ளிப் படிப்பிலிருந்தே கல்வி எட்டாத ஒன்றாக உள்ளது. கல்வி லாபம்ஈட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். மக்கள் இனி வீதிக்கு வருவார்கள். இன்று ஒருவர் ராஜினாமா செய்யக் கேட்டுள்ளனர். நாளைமற்றவர்களின் ராஜினாமாவைக் கோருவார்கள் என்று தீப்கே கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.