தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீம்களில் இருந்து வீதிக்கு!

3 Jun 2026, 8:54 pm
மீம்களில் இருந்து வீதிக்கு!

மீம்களில் இருந்து வீதிக்கு!

‘காக்ரோச் ஜனதா கட்சி’ ஒரே இரவில் இரண்டு கோடி பின்தொடர்பாளர்களைத் திரட்டி யது வெறும் வைரல் நிகழ்வல்ல; அது ஒரு தலைமுறையின் கிளர்ந்தெழுந்த கோபத்தின் வெளிப்பாடு. அந்தக் கோபம் மீம்களில் இருந்து வீதிக்கு வந்திருக்கிறது. நீட் ஊழலுக்கு எதிரான முதல் போராட்டக் களமாக மாறப்போகிறது என்ற செய்தி வரவேற்கத்தக்கது.

இன்று பட்டதாரி வேலையின்மை 11.2 விழுக் காடு. இது பொது வேலையின்மை விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம். இளைஞர் கள் சோம்பேறிகளாக உட்கார்ந்திருக்கவில்லை. அவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு ஆண்டுக் கணக்கில் தயாராகிறார்கள், கனவு காண்கிறார் கள். ஆனால், நிறுவன ஊழல் அந்தக் கனவு களை நொடியில் சிதைக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு அதன் வெளிப்படையான சான்று. 22.8 லட்சம் மாணவர்களின் உழைப்பை இந்த ஊழல் நிராகரித்தது.

இதோடு, கிக் எக்கனாமி என்ற பெயரில் நிரந்தர வேலை என்பதே இல்லாமல் போய் விட்டது. ஃப்ரீலான்சிங், தற்காலிக ஒப்பந்தங்கள், டெலிவரி வேலைகள் போன்றவை ‘சுதந்திரம்’ என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், உண்மையில் இவை புதிய அடிமைத்தனம். 2015 முதல் முறை சாரா துறையில் உண்மையான ஊதிய வளர்ச்சி பூஜ்ஜியமாக உள்ளது.

இந்த வலியை ஜென்ஸி இளைஞர்கள் மீம்க ளாகவும் நையாண்டியாகவும் வெளிப்படுத்து கின்றனர். இந்தச் ‘சுய-ஏளனம்’ என்பது தோல்வி யல்ல, வேதனையின் மொழி.

பொருளாதார நெருக்கடியில் உள்ள ஒரு தலைமுறை, டிஜிட்டல் தனிமையில் விடப்படும் போது வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் திசை திருப்பப்படும் அபாயம் உள்ளது. ஜெர்மனி, அர்ஜெண்டினாவில் அதுதான் நடந்தது. இந்தி யாவிலும் வேலையற்ற இளைஞர்களின் விரக்தி யை இடஒதுக்கீட்டின் மீதும், கலாச்சாரப் போர்க ளின் மீதும் திசைதிருப்பும் வலதுசாரி சக்திகள் வலையை விரிக்கின்றன. சிஜெபி-யின் அறிக்கை இதுவரை கார்ப்பரேட்-அரசு கூட்டுச் சதி, நீதித் துறை சதி மற்றும் ஊடக ஏகாதிபத்தியத்திற்கு எதி ராக நிலை கொண்டுள்ளது. இந்தத் தெளிவான திசை நீடிக்க வேண்டும்.

இவர்களின் அசாத்தியமான தகவல் தொ டர்புத் திறனை முறையான அரசியல் கல்வி மற்றும் அடிமட்ட அளவிலான களப்பணிகளு டன் இணைக்கப்பட வேண்டும். ஒரு வலிமை யான இடதுசாரி அரசியல் சக்தியாக இவர் களை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே, இளைஞர்கள் விரும்பும் ஆழமான, நீண்டகால மாற்றத்தைச் சாதிக்க முடியும்.

வெறும் இணையப் பேச்சோடு நின்றுவிடா மல், இவர்களைப் பல்கலைக்கழகங்கள், தொழிற் சாலைகள் மற்றும் டிஜிட்டல் பணியிடங்களில் நேரடியாகச் சந்திக்க வேண்டும். இதன் மூலம் இவர் களின் டிஜிட்டல் ஆற்றலை, தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் இணைந்த உண்மை யான களப் போராட்டமாக மாற்ற வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.