கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
18 May 2026, 9:36 pm

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதி திரு. சூர்யகாந்த் வேலையில்லாத இளை ஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று ஒரு வழக்கு விசார ணையின் பொழுது இழிவுபடுத்தினார்.

பின்னர் தான்பொய்யான கல்வி தகுதிகளை முன் வைப்பவர்களையே அவ்வாறு சொன்னதாக விளக்கம் கொடுத்தார். ஆனால் அவரின் கூற்று இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி யது.

இதன் விளைவாக சிலர் Cockroach Janata Party அதாவது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பை உருவாக்கி யுள்ளனர்.

அதன் கோரிக்கைகளாக கீழ்கண்டவற்றையும்முன்வைத்துள்ளனர்:

1. நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்கு பின்னர் மாநி லங்களவை உறுப்பினர் அல்லது வேறு எந்த பதவியும் தரக்கூடாது.

2. எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் சட்டப்பூர்வ மான வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டால் முதன்மை தேர்தல் ஆணையர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டும்.

3. நாடாளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமலேயே பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு தரப்பட வேண்டும். அமைச்சர் பதவிகளிலும் 50% பெண்கள் இடம்பெற வேண்டும்.

4. ஊடகங்கள் “கோடி மீடி யாக்களாக” இருக்கக் கூடாது. அம்பானி/ அதானி ஆகியோர் ஊடகங்களை வைத்திரு க்கக் கூடாது.

5. கட்சி தாவும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் 20 ஆண்டு களுக்கு பொது பதவி எதையும் வகிக்கக் கூடாது என தடை செய்யப்பட வேண்டும்.

இந்த அமைப்பில் ஏற்கெனவே 40,000 உறுப்பி னர்கள் இணைந்துள்ளன ராம். பலரும் வேறு சில கோரிக்கைகளையும் இணைக்க ஆலோசனை களை வழங்கி வருகின்ற னர்.