ஒன்றிய பாஜக அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லியில் விடிய, விடிய கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் மாணவர்கள், விவசாயிகளுக்கும் அழைப்பு
21 Jun 2026, 9:16 pm

ஒன்றிய பாஜக அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லியில் விடிய, விடிய கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்

மாணவர்கள், விவசாயிகளுக்கும் அழைப்பு

சிபிஎஸ்இ விடைத்தாள் டிஜிட் டல் மதிப்பீடு குளறுபடிகள், நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இணையதள கட்சியான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனர் அபிஜித் தீப்கே இந் தியா வந்தவுடன் ஜூன் 6 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. ஜூன் 11 அன்று மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்திலும், ஜூன் 15 அன்று ராஜஸ்தான் மாநி லம் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நடைபெற்றது. ஜெய்ப்பூர் போராட் டத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர் களால் அபிஜித் தீப்கே தாக்கப்பட் டார். இந்த போராட்டங்களின் போது தர்மேந்திர பிரதான் பதவி விலகா விட்டால் ஜூன் 20 அன்று மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கரப் பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அவர் பதவி விலகவில்லை.

2ஆவது நாளாக போராட்டம்

இந்நிலையில், எச்சரித்தது போலவே ஜூன் 20 அன்று (சனிக் கிழமை) தில்லி ஜந்தர் மந்தரில் அபி ஜித் தீப்கே தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தில்லி மட்டுமல்லாது பல்வேறு மாநி லங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட னர்.

அமித் ஷா காவல்துறை மிரட்டல்

சனிக்கிழமை மாலை 5 மணி யுடன் போராட்டத்திற்கான அனு மதி முடிந்துவிட்டதாகக் கூறி, ஒன் றிய உள்துறை (அமித் ஷா) அமைச் சக கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை, போராட்டம் நடத்திய வர்களை உடனடியாகக் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்தது. ஆனால்,”ஒன்றிய பாஜக அமைச் சர் பதவி விலகும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட் டோம்” என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபி ஜித் தீப்கே உறுதியாக அறிவித்தார். இதற்கு போராட்டக் களத்தில் இரு ந்த ஆதரவாளர்கள், மாணவர்கள் “ஆமாம், கலைந்து செல்ல மாட் டோம்” என முழங்கினர். இதனால் தில்லி ஜந்தர் மந்தர் மைதானம் அதிர்ந்தது.

விளக்குகளை அணைத்து நெருக்கடி

இதனைத் தொடர்ந்து, பாஜக ஆளும் தில்லி மாநில நிர்வாகம் சனிக்கிழமை இரவு போராட்டக் களத்தில் இருந்த மின்விளக்கு களை அணைத்து, குடிநீர், கழி வறை வசதிகளுக்கான தண்ணீர் இணைப்பை துண்டித்தது. ஆனா லும் போராட்டத்தை கைவிடாமல் மொபைல் போன் வெளிச்சத்தி லேயே மாணவர்கள் உட்பட அனை வரும் தங்கள் போராட்டத்தை விடிய, விடிய தொடர்ந்தனர். இதற்கு இடையில் தில்லி காவல்துறை யின் அடாவடியைக் கண்டித்தும், மின்சாரம், குடிநீர் வழங்ககோரி யும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர், மாணவர்கள் கம்பீரமாக குரல் எழுப்பினர். இதனால் மிரண்ட தில்லி பாஜக அரசாங்கம் மின்சா ரம், குடிநீர் வசதிகளை மீண்டும் வழங்கியது.

தட்டுகளை ஏந்தி ‘கோ பிரதான் கோ’ முழக்கம்

ஞாயிறன்று காலையில் ஜந்தர் மந்தரில் மாணவர்களின் கூட்டம் மேலும் அதிகமானது. 2ஆவது நாளாக நடைபெற்ற இந்த போராட் டத்தில் கைகளில் தட்டுகள், கரண்டி களை ஏந்தியவாறு, அவற்றை பல மாகத் தட்டி ‘கோ பிரதான் கோ’ (Go Pradhan Go) என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக அவர் கள் முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் இந்த போராட் டத்திற்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக் பகுதி தலைவர்களும் தங்க ளது தனிப்பட்ட முறையில் ஆதர வைத் தெரிவித்து பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் அழைப்பு

தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்து பேசிய அபிஜித் தீப்கே,”விவசாயிகள் தங்கள் உரி மைகளுக்காகப் போராடியபோது, மாணவர்கள் அவர்களுக்குத் தோள் கொடுத்தனர். இன்று மாண வர்களுக்கு அதே போன்றதொரு ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, இந்தியாவின் அனைத்து விவசாயிகளும் தில்லிக்கு வந்து மாணவர்களுடன் கைகோர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமை நீட் மறுதேர்வு எழுதச் சென் றுள்ள 22 லட்சம் மாணவர்களும் தேர்வு முடிந்ததும் இந்த போராட் டத்தில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதே தட்டு; அதே போராட்டம்

கொரோனா தீவிரமாக பரவிய காலமான 2020ஆம் ஆண்டு மார்ச் 22 ஞாயிறு மாலை 5 மணிக்கு அனைத்து இந்தியர் களும் தங்களது வீட்டு வாசல்களிலோ, பால்கனிகளிலோ அல்லது ஜன்னல் ஓரங்களிலோ நின்று 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக கைதட்ட வேண்டும் அல்லது தட்டு (தாம்பாளம்), மணிகள், கரண்டிகள் ஆகி யவற்றைத் தட்டி ஓசை எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். கொரோனவை கட்டுப்படுத்த சுகாதார நட வடிக்கை எடுக்காமல், தடுப்பூசி கண்டுபிடிக்காமல் இப்படி தட்டு தட்ட சொல்கிறாரே? என்ன அறிவாளியான பிரதமர் என மோடி யின் உத்தரவுக்கு எதிராக அப்போது நாடு முழுவதும் கடும் கண்ட னங்கள் கிளம்பின. இத்தகைய சூழலில், கொரோனா காலத்தில் மோடி உத்தரவிட்ட நகைசுவையான தட்டு தட்டும் உத்தரவை, தில்லி ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மீண்டும் கொண்டு வந்து மோடி யை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துள்ளார் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே.