சேவல் பந்தயம்: 16 பேர் கைது
1 Dec 2025, 5:20 pm
<p><strong>சேவல் பந்தயம்: 16 பேர் கைது </strong></p>
<p>கோவை, டிச.1- கொள்ளுப்பாளையத் தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், கரு மத்தம்பட்டி அருகே கொள் ளுப்பாளையத்தில் சேவல் சண்டை நடப்பதாக கருமத் தம்பட்டி போலீசாருக்கு திங்களன்று தகவல் கிடைத் தது. இதனையடுத்து அப்பகு திக்கு சென்ற போலீசார், பணம் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்திக் கொண்டி ருந்த 16 பேரை கைது செய்த னர். மேலும் அவர்களிடமி ருந்து 5 சேவல்கள், ரூ.9,700 ரொக்கம், 12 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள், 8 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 16 பேர் மீது விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம், தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனை வரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்த னர்.</p>
