தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் கோகோ கோலா நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவு

9 Jul 2026, 10:48 pm
மாற்றுத்திறனாளி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்  கோகோ கோலா நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவு
<p><strong>மாற்றுத்திறனாளி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் கோகோ கோலா நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவு</strong></p><p>நேமம், ஜூலை 9- திருவள்ளூர் மாவட்டம், நேமத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவ்ரேஜஸ் பிரைவேட் லிமிடெட் (எச்சிசிபி) நிறுவனத்தில், 2002-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பணியாற்றி வரும் காது கேளாத மற்றும் வாய் பேச முடி யாத 31 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப் பரிசீலிக்குமாறு மாற்றுத்திறனாளி களுக்கான மாநில ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்த நடவடிக்கையை 60 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்திற்கு ஆணையர் ஆர். சுதன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 2-ஆம் தேதி பிறப்பிக்கப் பட்ட இந்த இறுதிப் பரிந்துரை ஆணை யில், அந்த 31 ஒப்பந்த ஊழியர்களும் அவர்களின் ஊனத்தைக் காரணம் காட்டி திட்டமிட்டே பாகுபாட்டிற்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்றும், இது ‘மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016’-ஐ அப்பட்டமாக மீறும் செயல் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் 2002-ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் பணிகள் ஒப்படைக்கப்படும் சூழலில், மாற்றுத்திற னாளி அல்லாத சக பணியாளர்களைப் போலவே இவர்கள் தங்களின் கடமை களைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இவர்கள் ‘லோடர்கள்’ எனப் பெயரிடப் பட்டிருந்தாலும், தரம் சரிபார்த்தல் மற்றும் அது தொடர்பான திறமை சார்ந்த பணிகளையே மேற் கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும், 2010-ஆம் ஆண்டில் அந்நிறு வனம் மாற்றுத்திறனாளி அல்லாத 35 ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்தபோதும், இந்த 31 மாற்றுத்திறனாளி ஊழியர்களை மட்டும் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்தது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் அந்நிறுவனம் மறுத்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில், தங்களுக்கும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே முதலாளி-தொழிலாளி உறவு முறை இல்லை என்று எச்சிசிபி நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியதற்காகவே அந்நிறுவனம் ‘சிறந்த தனியார் முதலாளி விருது’ பெற்றி ருந்தது. ஒருபுறம் இவ்விருதைப் பெற்றுக் கொண்டு, மறுபுறம் தொழிலாளர்களுடன் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறுவது முரண்பாடானது என ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட 31 தொழிலா ளர்களின் பணி நிரந்தரம் குறித்து 60 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், நிறுவனம் ஒரு விரிவான ‘சம வாய்ப்புக் கொள்கையை’ அடுத்த 90 நாட்களுக்குள் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்றும் ஆணையர் உத்தர விட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.