தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொக்க கோலா நிறுவனம் சிஐடியு இடையே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து

21 Dec 2025, 3:21 pm
கொக்க கோலா நிறுவனம் சிஐடியு இடையே  ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
<p><strong>கொக்க கோலா நிறுவனம் சிஐடியு இடையே &nbsp;ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து</strong></p> <p>சென்னை, டிச. 21- 2 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்கு பின் கொக்க கோலா நிறுவனத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது பூந்தமல்லி அடுத்த நேமத்தில் கொக்க கோலா நிறுவனத்தின் கிளை உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) தொழி லாளர்கள் இணைந்து தங்கள் கோரிக் கைகளுக்காக போராடி வருகின்றனர். சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய &nbsp;உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிலா ளர் துறை ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்று வந்தது. இடையிடையே போராட் டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் தொழிலாளர் துறை ஆணையர் வெற்றி செல்வி முன்னிலையில் வெள்ளியன்று (டிச. 19) பேச்சுவார்த்தை நடைபெற்றது. &nbsp;இதில் நிர்வாகத்தின் சார்பில் துணைத் தலைவர் வெங்கட், தென்னிந்திய மனித வள மேலாளர் திருப்பதி ராவ், கிளை மேலா ளர் சம்பத், கிளை மனிதவள மேலாளர் ராக வேந்திரா, சங்கத்தின் சார்பில் பொதுச் செய லாளர் சு.பால்சாமி, துணைத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், கிளை தலைவர் செந்தில்குமார், செயலாளர் இந்திரஜித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். &nbsp;அதில் ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு 30 &nbsp;சதவிகிதம் வரை &nbsp;ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதில் 80 சதவிகி தத்திற்கு மேல் அடிப்படை ஊதியம், அக விலைப்படியில் உயர்வு என்பது ஏற்கப் பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.