தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டணி உரசல்; ஆளுங்கட்சி உற்சாகம்

26 Mar 2026, 2:46 pm
கூட்டணி   உரசல்; ஆளுங்கட்சி   உற்சாகம்
<p><strong>கூட்டணி &nbsp; உரசல்; ஆளுங்கட்சி &nbsp; உற்சாகம்</strong></p> <p>ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மொடக் குறிச்சி, காவிரி கரைபுரண்டோடும் செழுமையான நிலப்பரப்பு. இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள், 13 பேரூராட்சிகள் எனப் பரந்து விரிந்துள்ள இந்தத் &nbsp;தொகுதியில், இம்முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் 281 வாக்குகள் என்ற நூலிழை வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட திமுக, இம்முறை அந்த இடை வெளியை பல மடங்கு வெற்றியாக மாற்றும் முனைப்பில் களம் காண் கிறது. கூட்டணிக்குள் புகைச்சல் கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, அதிமுகவினரின் முழுமையான ஒத்துழைப்பாலேயே வெற்றி சாத்தியமானது. ஆனால், வெற்றிக்குப்பின் தங்களின் &rsquo;சொந்த பலத்தால்&rsquo; வென்றதாக பாஜகவினர் கூறிக்கொள்வது, உள்ளூர் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அதிமுகவினர் பொறுப்பிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூட தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மறுப்பதாக எழும் புகார், கூட்டணியின் பிளவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. &rdquo;எங்கள் உழைப்பில் வென்றுவிட்டு, எங்களுக்கே நிதி தர மறுப்பதா?&rdquo; என்ற கோபத்தில் அதிமுகவினர் உள்ளனர். இந்த உட்கட்சிப் பூசலும், ஒருங்கிணைப்பு இல்லாமையும் எதிர் அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. திமுகவின் பலமான கட்டமைப்பு மறுபுறம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதிக்கு நேரடியாக வருகை தந்து, தீரன் சின்னமலை மற்றும் பொல்லான் ஆகியோரின் நினைவு மணிமண்டபங்களைத் திறந்து வைத்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சோலார் பேருந்து நிலையத் திறப்பு விழாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, திமுகவின் மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. வாக்காளர் விவரம் இறுதி வாக்காளர் பட்டியலின்படி: ஆண்கள்: 98,532, பெண்கள்: 1,07,577, மாற்றுப்பாலினத்தவர்கள்: 13 என மொத்தம்: 2,06,122 வாக்காளர்கள உள்ளனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலை யில், தமிழக அரசின் &rsquo;மகளிர் உரிமைத் தொகை&rsquo; மற்றும் &rsquo;விடியல் பயணம்&rsquo; போன்ற திட்டங்கள் திமுகவிற்குப் பெரும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைகளும் எதிர்பார்ப்புகளும் தாலுகா அலுவலகம் மற்றும் அரசுகலைக் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் இல்லாதது போன்ற சில நீண்ட கால கோரிக்கைகள் இத்தொகுதியில் உள்ளன. இருப்பினும், கொடுமுடியின் பெருமையான கே.பி.சுந்தராம்பாளின் முழு &nbsp;உருவச் சிலை திறப்பு போன்ற கலாச்சார &nbsp;முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் மக்களின் மனதை வென்றுள்ளன. கடந்த முறை மிகக்குறைந்த வாக்குகளில் வாய்ப்பை இழந்த திமுக அணி, இம்முறை அரசின் சாதனைகளை முன்வைத்து தீவிர மாக பணியாற்றி வருகிறது. பாஜக - அதிமுக &nbsp;இடையே நிலவும் &rsquo;ஈகோ&rsquo; யுத்தம் ஒருபுறம், திமுகவின் நலத்திட்ட வரிசை மறுபுறம் என &nbsp;பார்க்கும்போது, மொடக்குறிச்சி கோட்டை இம்முறை திமுக கூட்டணிக்கே செல்வதற் கான வாய்ப்புகள் உள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.