தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

13 May 2026, 9:50 pm
வாய்ப்பு வாசல்

கோல் இந்தியா 660 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான Coal India Limited (CIL) அமைப்பில் மேனேஜ்மென்ட் டிரெயினி (Management Trainee – E1 Grade) பணியிடங்களுக்கு மொத்தம் 660 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் BE / B.Tech / MCA / M.Sc/ MA போன்ற பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – ஏப்ரல் 30, 2026 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு குறைந்த பட்சம் 30 வயது முதல் அதிகப் பட்சம் 56 –க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் என அரசு விதிப்படி வயது தளர்வு உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு இரண்டு தாள்களாக இருக்கும். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவு, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 + GST ரூ.180 சேர்த்து மொத்தம் ரூ.1180 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://www.coalindia.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 11, 2026 ஆகும்.

மெட்ரோ ரயில் 361 பணியிடங்கள்

குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) ஐஐடி/ டிப்ளமோ தகுதியுடையவர்களுக்கான 361 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் ஏதெனும் ஒரு பொறியியல் துறையில் (Electrical / Electronics / Mechanical / Computer Science / Civil ) - ITI / Diploma / Engineering பட்ட/பட்டய/சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்த பட்சம் 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது தளர்வு உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் முறை – எழுத்துத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் - பொதுப்பிரிவினருக்கு ரூ.600. இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 28, 2026 ஆகும்.

யுஜிசி நெட் தேர்வு

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் UGC-NET ஜூன் 2026 தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JRF பணிக்கான அதிகபட்ச வயது 30 ஆகும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு விதிகள் உள்ளன. தகுதியானவர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவர். பொதுப்பிரிவினருக்கு ரூ.1150, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி,எஸ்டி ரூ.325 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 20, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.