கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
25 Sept 2026, 12:46 am

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கடலூர், செப்.24-கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

தீபாவளியை முன்னிட்டு காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவைகள், கோரா காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள், வேட்டி, லுங்கி, துண்டு, சட்டைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு மொத்தம் ரூ.4.22 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்கப்படுவதுடன், அரசு பணியாளர்களுக்கு கடன் விற்பனை வசதியும் உள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு பணியாளர்கள் கோ-ஆப்டெக்ஸில் பொருட்களை வாங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.