கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனைத் தொடக்கம்
29 Sept 2026, 2:11 am
<p><strong>கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனைத் தொடக்கம்</strong></p><p>உதகை, செப். 28-உதகை சேரிங்கிராஸ் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், ”தமிழக நெசவாளர்களுக்கு உறுதுணையாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ்நிறுவனம், பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு கடன் விற்பனை வசதியும் உண்டு.வாடிக்கையாளர்களை கவரும் வகையில் காஞ்சிபுரம், சேலம், கோவை பட்டுச் சேலைகள், லினன் சட்டைகள்,பிரிண்டட் குர்த்தீஸ்கள், கலம்கரி ஆடைகள் மற்றும் சிறுமிகளுக்கான பட்டுப் பாவாடை ரகங்கள் பெருமளவில் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மண்டலத்திற்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு இந்தாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் கடைகள் இயங்கும்” என்றார்.இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ், மேலாளர் அய்யப்பன், உதகை வட்டாட்சியர் சதீஷ்வர நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
