கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தொடங்கி வைத்தார்
23 Sept 2026, 10:34 pm
<p><strong>கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தொடங்கி வைத்தார்</strong></p><p>விருதுநகர், செப்.23-தீபாவளி பண்டிகையையொட்டி, விருதுநகர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட் சியர் ஷரண்யா அரி தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக வளர்ச்சி பெற் றுள்ளது. பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் பாரம் பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பல்வேறு கைத்தறி ரகங்களை உற் பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.தீபாவளியையொட்டி பருத்தி சேலைகள், வேட்டிகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பட்டு மற்றும்பருத்தி ரகங்களில் புதிய வடிவமைப்புகள் மற் றும் வண்ணங்களிலும் பல் வேறு ரகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.</p><p>பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதமும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட் டத்தில் உள்ள 3 கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.54 கோடி நிர்ணயிக்கப்பட் டுள்ளது.கோ-ஆப் டெக்ஸ் ஜவுளி ரகங்களை அதன் இணையதளம் மூலம் கொள்முதல் செய்யலாம். மேலும், மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர் கள் பயன்பெறலாம் என்றார்.நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் சந்திரசேகரன், துணை மேலாளர் தீபா, கீதா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.</p>
