முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

18 May 2026, 9:13 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது போல சிஎன்ஜி விலையும் 2ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலையை மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தது, தற்போது அம்பலமாகியுள்ளது.

என்ரிச் மணி தலைமைச் செயல் அதிகாரி ஆர்.பொன்முடி

தொடர்ந்து நீடித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையும், எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களும் உலகளவில் டாலருக்கான தேவையை வலுப்படுத்தியுள்ளன. இது இந்திய ரூபாயின் மதிப்பை 96 ரூபாய் என்ற எல்லையைத் தாண்டி வீழ்ச்சியடையச் செய்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகலாம்.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

இப்போது உச்சநீதிமன்றத்திற்குள்ளும் சில ‘கரப்பான் பூச்சிகள்’ ஊடுருவி யிருக்கலாம் போல தெரிகிறது. உமர் காலித்திற்கு ஜாமீன் மறுத்த உத்தரவு குறித்து நீதிபதி நாகரத்னா உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, விசாரணை தாமதமாகும் வழக்குகளில் ‘சிறை அல்ல, ஜாமீனே விதி’ என்ற கொள்கையையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சக நீதிபதிகள் தங்களின் செயல்களைப் பற்றி சுயபரிசோதனை செய்வார்களா?

யுவதேஷ் சமூக ஊடகம்

அத்தியாவசிய தேவையின்றி வெளிநாடு செல்ல வேண்டாம் என மோடி அரசு அறி வுறுத்துகிறது. ஆனால் பிரதமர் மோடி ஒரு வாரம் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அப்படி என்ன அத்தியாவசியத் தேவைக்காக சென்றுள்ளார்? இதுகுறித்து பாஜக விளக்கம் அளிக்குமா?

Share
FacebookXWhatsAppTelegram