தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 May 2026, 10:40 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு

ஒன்றிய பாஜக அரசானது, திங்கட்கிழமை (மே 11) முதல் முதலமைச்சர் விஜய்க்கு ‘இஸட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கி யுள்ளது. இந்தியாவின் தனிநபர் பாதுகாப்பு கட்டமைப்பில் ‘இஸட் பிளஸ்’ என்பது மிக உயரிய அடுக்கு. ஒரு நபரின் உயிருக்கு மிக அதிகமான அச்சுறுத்தல் இருப்பதாக அரசு கருதும்போது மட்டுமே இது வழங்கப்படும். 55 அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், அதிநவீன எம்பி5 துப்பாக்கிகள் ஏந்திய வீரர்கள், 10க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி கமாண்டோக்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர். தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய வற்றிலிருந்து இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இஸட் பிளஸ் பிரிவில் ஒரு குண்டு துளைக் காத கார், இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஒரு முன்னோடி வாகனம் வழங்கப்படும்.

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’

சென்னை: பதவியேற்றதும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெ ழுத்திட்ட விஜய், இரண்டாவது கையெழுத்தாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ திட்டத்திற்கும் கையெழுத்திட் டார். மூன்றாவதாக போதைப் பொருள் தடுப்புப் படை திட்டத்திற்கும் கையெழுத்திட்டார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் படை குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுத்தல், பாதிக்கப் பட்ட பெண்களை மீட்டு பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். முதலமைச்சர் விஜய் விரைவில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று விசிக தலைவர் திருமாவளவனையும் சந்திக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம்: ஆதவ் விளக்கம்

சென்னை, மே 11 - மே 10 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக வந்தே மாதரம் முதலாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப் பட்டது. மாலையில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் இதே வரிசை பின்பற்றப்பட்டது. இதற்கு கடும் கண்ட னங்கள் எழுந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான் தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சி களில் முதலில் ஒலிக்கப்ப டும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்ப டும். அதுதான் வழக்கமான மற்றும் பொருத்தமான நடை முறை. தவெக தலைமையி லான புதிய அரசுக்கும் இந்த நடைமுறையில் எந்தவித மான மாற்றுக் கருத்தும் இல்லை” என்று தெரிவித்து உள்ளார். மேலும், பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலித்தது குறித்து, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருந்த தாகவும், தவிர்க்க முடியாத சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாட லாக ஒலித்தது என்று விளக்கியிருக்கும் ஆதவ் அர்ஜூனா, இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப் படாது என்றும், இந்தியா வில் அனைத்து மாநிலங்களி லும் அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே தொடக் கத்தில் இசைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார்.

ஒரு வாக்கு வித்தியாச தோல்வி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, மே 11 - சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தலில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, 83,375 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பனை வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் (மே 11) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மே 10 அன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எல். விக்டோரியா கெளரி மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெரிய கருப்பன் தரப்பு வழக்கறிஞர், “தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது; அதற்கு ஆணையமே பொறுப்பேற்க வேண்டும்” என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பிறகு காலதாமதமாகக் கிடைக்கும் அஞ்சல் வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படக்கூடாது என விதிகள் தெளிவாகக் கூறுகின்றன என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.