தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இன்றி மக்கள் பணியாற்றுவோம்! நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற பின் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

13 May 2026, 10:02 pm
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இன்றி மக்கள் பணியாற்றுவோம்! நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற பின் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இன்றி மக்கள் பணியாற்றுவோம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற பின் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை, மே 13 - தமிழக வெற்றிக் கழக அரசு புதனன்று சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித் துள்ளது.

“மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள் கையில் எவ்வித மாற்றமும் இன்றி, எமது அரசு மக்களுக்காக உண்மையாக உழைக்கும்” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் விவாதம் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சிக் கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே சொற் போர் நிலவியது.

விவாதத்தைத் தொடங்கிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா லின், தவெக அரசின் நம்பகத்தன்மை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அவர் தனது உரையில், “தமிழக மக்கள் தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மையாக வாக்களிக்க வில்லை.

வெறும் 1.72 கோடி மக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற இந்தக் கட்சி, 3.21 கோடி மக்களால், அதாவது 65 சதவீத வாக்காளர் களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியாகும்” என்றார்.

“தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தாலும், இதுவரை வாக்களித்த மக்களுக்கு அவர் நேரில் சென்று நன்றி கூடத் தெரிவிக்கவில்லை.

இந்த ஆட்சி ‘புஷ்பா’ திரைப்பட பாணியில் ஒருவித மாயை யான பிம்பத்தை வைத்துக்கொண்டு நடைபெறு கிறது.

இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி ‘ரியல்’ ஆட்சியை நடத்த வேண்டும்.

குறிப்பாக, முந்தைய அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கல்லூரி மாணவர்களுக் கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று வலி யுறுத்தினார். மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம் சட்டமன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தார்.

“தூய்மையான அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், பிளவு பட்ட அதிமுக உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து அசுத்தமான அரசியலில் ஈடுபடுகின்ற னர்.

இது ஒரு தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என்று தமிழக மக்களே வருந்தும் சூழல் உருவாகியுள்ளது.

1999-ல் பாஜக-வுடன் திமுக உறவு வைத்த தாகக் கூறுபவர்கள், இன்று அதே போன்ற ஒரு மறைமுக அரசியலைத் தான் முன்னெடுக்கிறார் கள்.

எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது; மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படு வோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் விஜய் அறிக்கை எதிர்க்கட்சியினரின் அனைத்து விமர்சனங் களுக்கும் மாலையில் தனது அறிக்கையின் மூலம் முதலமைச்சர் விஜய் பதில் அளித்தார்.

அதில், “சட்டமன்றத்தில் எமது அரசு 144 உறுப்பி னர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

எங்களைப் பெரும் பான்மை மக்கள் நிராகரித்துவிட்டதாகப் பழைய பல்லவியைப் பாடும் திமுக-வின் வாதம் வேடிக் கையானது.

தேர்தல் ஆணையத்தின் கணக்குப் படி, தனித்துப் போட்டியிட்ட நமது தவெக 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவோடு களம் கண்ட திமுக-வின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் வெறும் 24 மட்டுமே.

எங்களை விட 52 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்று, தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, எங்களைப் பார்த்து ஏளனம் பேசுவது நகைப்புக்குரியது.

திமுக-வைப் போல எதையும் ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து மந்திரி பதவிகளைப் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

நாங்கள் ‘சேஞ்ச்’ மற்றும் ‘சேலஞ்சை’ மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்கள்.

1999-ல் திடீரென பாஜக-வை ஆதரித்து, பின் அவர்களுடன் கூட்டணி வைத்துப் பதவிகளை அனுபவித்த திமுக-வின் ‘டீசண்ட் வெர்ஸன்’ என்ன என்பது உலகிற்கே தெரியும். எமது அரசு ‘புஷ்பா’ அரசு என்று விமர்சிக்கப் படுகிறது.

மக்கள் தந்த தோல்வியால் ஏற்பட்ட பொறாமையினால் திமுக இப்போது புகை கக்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் மேஜிக்க லாகவும், மிராக்கிளாகவும் மக்கள் நலப் பணி களைச் செய்து காட்டுவோம்.

திராவிடப் பாரம் பரியத்தின் நற்பண்புகளையும், அறிஞர் அண்ணாவின் கனிவையும் பின்பற்றி, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்று இந்த அரசு பயணிக்கும்.

ஆதாரப்பூர்வமான குறைகளை யார் சொன்னாலும் திருத்திக்கொள் ளும் மனப்பக்குவம் எங்களுக்கு உண்டு.

ஆனால், சொத்தையான வாதங்களை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.