முந்தய பக்கம்

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு : முதல்வர் எச்சரிக்கை

16 Jul 2026, 9:14 pm
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு : முதல்வர் எச்சரிக்கை
<p><strong>ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு : முதல்வர் எச்சரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 16 - முதலமைச்சர் விஜய் தலை மையில் தமிழக அமைச்சர வைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 16) சென்னை தலை மைச் செயலகத்தில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குதல், புதிய திட்டங்களைத் தொடங்குதல் ஆகிய விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் முதலமைச் சர் விஜய், அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை யும் எச்சரிக்கைகளையும் வழ ங்கியதாக தகவல் வெளியாகி யுள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள் அல்லது அவர்களது துறை கள் தொடர்பாக ஊழல், லஞ்சம், முறைகேடு உள்ளிட்ட புகார்கள் வந்தால் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், முறைகேடு உறுதி யானால் சம்பந்தப்பட்ட அமை ச்சரைப் பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்ததாகத் தெரிகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram