நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! நந்தன் நிலேகனி குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்
4 Nov 2026, 11:11 pm

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்! நந்தன் நிலேகனி குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை, நவ. 4 –‘நீட்’ தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நந்தன் நிலேகனிதலைமையிலான ஒன்றிய அரசின் உயர்மட்டப் பணிக்குழுவிடம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்டபிரச்சனைகளைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வுகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பாக ஆராய, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, மத்தியக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் அனிதா கர்வால், பாதுகாப்புத் துறைநிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்த உயர்மட்டப் பணிக்குழு சென்னைதலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியது. அப்போது, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் உயர்கல்விச் சேர்க்கைக்கான பிற நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டது.

அரசின் கோரிக்கைஆகஸ்ட் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுட்டிக்காட்டப்பட்டது. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவற்றுக்குப் பதிலாக 12-ஆம் வகுப்புப்பொதுத்தேர்வு மதிப்பெண்களையே மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும்முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.இந்தச் சந்திப்பின்போது பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த ராஜ்மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்உடனிருந்தனர்.