தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதல்வர் விஜய் - உதயநிதி காரசார விவாதம் : திமுக வெளிநடப்பு!

23 Jun 2026, 10:31 pm
முதல்வர் விஜய் - உதயநிதி காரசார விவாதம் : திமுக வெளிநடப்பு!

முதல்வர் விஜய் - உதயநிதி காரசார விவாதம் : திமுக வெளிநடப்பு!

சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்திற்கு பதிலளிக்கும் உரையானது, முதலமைச்சர் ஜோசப் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே, கடும் விவாதமாக மாறியது. முதலமைச்சரின் பதிலுரைக்குக் கண்டனம் தெரிவித்துத் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

‘மக்களாட்சியில் ஊழலுக்கு இடமில்லை’: முதல்வர் விஜய்

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அர சியல் பயணம் வெறும் ‘ரீல்’ அல்ல, அது மக்க ளின் அன்பால் உருவான ‘ரியல்’ என்று குறிப்பிட்டார். முந்தைய திமுக அரசின் நிதி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடிய முதலமைச்சர், “இது சோஃபா மாடல் ஆட்சி என்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டோம், தப்பு செய்ய மாட்டோம் என்ற உறுதியோடு இருப்பதால் தான் பல கட்சிகளு டன் இணைந்து இக்கூட்டணி ஆட்சியை நடத்து கிறோம். டாஸ்மாக் நிறுவனத்தில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முந்தைய ஆட்சியில் அடிக்கப்பட்ட கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, அந்த நிதி முழுவதும் தற்போது அரசு கஜானாவிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” என்று ஆவேசமாக கூறினார். ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, 717 டாஸ்மாக் கடைகள் மூடல், ரூ. 5,932 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாகப் பட்டியலிட்ட அவர், மின்வெட்டுப் பிரச்சனைகள் விரைவில் முழுமையாக தீர்க்கப்படும் என்றார். மேலும், தவெக அரசுக்கு சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள் அளித்துள்ள ஆதரவு, அவர்கள் சுயேச்சையாக எடுத்த முடிவு என்றும், இதில் திமுக கதற வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். உரையின் இறுதியில், எதிர்க்கட்சிகளின் பொருளற்ற விமர்சனங்களுக்குப் பதிலடி என்பதாக ‘புஷ்பா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற சைகையை அவையில் செய்து காட்டினார்.

“சட்டமன்றம் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறுகிறது” : உதயநிதி ஸ்டாலின்

முன்னதாக, விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சிக்கல்கள் மற்றும் மின்வெட்டுப் பிரச்சனைகள் குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பினார். முதலமைச்சரின் பதிலுரையின்போது ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் பொதுக்கூட்டங்களில் பேசுவது போல ஆதாரமற்ற அவதூறுகளைச் சட்டமன்றத்தில் பேசி வருகிறார். சபாநாயகர் அவருக்கு மட்டுமே முழுமையாகப் பேச அனுமதி அளிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனம் பேசி முடியும் வரை யாரும் குறுக்கிடக் கூடாது என்பதைப் போலச் சட்டமன்றத்தை நடத்தப் பார்க்கிறார்கள். சட்டமன்றத்தில் தவெகவினர் விசிலடிக்கத் தொடங்கி விட்டனர், விரைவில் டான்ஸ் ஆடவும் ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. முதல்வரின் உரை 10 ரீல்ஸ்களுக்கான ஸ்க்ரிப்ட் போலத்தான் இருக்கிறது. தேர்தல் வாக்குறு திகள் எதையும் நிறைவேற்றாமல், எல்லாவற்றி ற்கும் திமுக மீது பழி போடுவதையே வாடிக்கை யாக வைத்துள்ளனர்” எனச் சாடினார்.

செப். 15 முதல் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்’ கீழ் 1 கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர் பண்பாட்டு மரபின்படி, அரசு ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் தாய்மாமனின் பங்கை ஏற்று அன்போடு வரவேற்கும் விதமாக இத்திட்டம் வடி வமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள் ளது. இதற்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத் தின் கீழ் பயன்பெறுவர் என்றும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.