தீக்கதிர் முக்கிய செய்திகள்
31 May 2026, 9:42 pm

நன்றி அறிவிப்பு கூட்டம்: இன்று முதல்வர் விஜய் திருச்சி பயணம்

சென்னை, மே 31 - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் முதன்முறை யாக தேர்தலை சந்தித்த தவெக தனிப் பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ச.ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதி களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இந்தச் சூழலில் திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் விஜய் திங்க ளன்று (ஜூன் 1) திருச்சி செல்கிறார். முதல்வராக பதவி யேற்ற பிறகு இது அவரது முதல் பயணமாகும். தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் விஜய், திருச்சி-புதுக்கோட்டை டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர் சத்திரம் பேருந்து நிலை யம் வழியாக திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத் திற்கு வந்தடைகிறார். அங்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார். கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்த்து காவல்துறையினர் சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களையும் திட்டமிட்டு வரு கின்றனர்.

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் மவுனம் காக்கும் தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்

சென்னை, மே 31 - ஆளுநர் மாளிகையில் காவி வண்ணத்தில் திருவள்ளு வர் புகைப்படம் வைக்கப்பட்டதற்கு எதிராக முதல்வர் விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலை வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர், எப்போ துமே மவுனமாக இருக்கிறவர் முதலமைச்சராக இருக்கிறார் என்ற தைரியத்தில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமாக கொண்டாடும் நிலையில், ‘வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்’ என்ற பெய ரில் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய உதயநிதி, வள்ளுவரை அவ மதிக்கும் சக்திகளுக்கும் அதை அனுமதிக்கும் அரசுக் கும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் இதே மாதிரி நடந்தபோது அப்போ தைய ஆளுநரை கடுமையாக கண்டித்தோம் என்று நினைவுகூர்ந்த அவர், இப்போதும் முதல்வர் இந்த விஷ யத்தில் அஞ்சாது குரல் எழுப்ப வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.'

நடிகர் அஜித் தாயார் உடல் தகனம்

சென்னை, மே 31- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், வயது மூப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை உல கினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். துபாயில் இருந்த நடிகர் அஜித் சனிக்கிழமை (மே 30) இரவு நாடு திரும்பினார். அவரின் வருகைக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய், மறைந்த மோகினி மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஜித் குமார் தாயாரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானம் வரை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, பெசன்ட் நகர் மின்மயானத் தில் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

5 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் தவெக அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து, வெள்ளிக் கிழமை 14 மாவட்டங் களுக்கு ஐஏஎஸ் அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட் டனர். இதையடுத்து சனிக் கிழமை 5 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணி யிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள், சென்னை - மாலதி ஹெலன், இராமநாத புரம் - சிவகுரு பிரபாகரன், திருவள்ளூர் - கவிதா, பெரம் பலூர் - சரண்யா ஹரி, அரி யலூர் - மிருணாளினி ஆகிய 5 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய் துள்ளது.

ஒரு மாநிலங்களவை இடத்திற்கு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1 அன்று தொடங்குகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 24 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜேடிஎஸ் மூத்த தலைவர் எச்.டி. தேவகவுடா உள்ளிட்ட 24 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஜூன் 8 ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற் கான கடைசி நாள் ஜூன் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படும்.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை அரசு உறுதி செய்ய தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழு மையாக தள்ளுபடி செய்ய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், ஒன்றிய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கக் கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், அதிமுக, தேமுதிகவுக்கு துரோகம் செய்தது என்றும் தேமுதிகவை குறைத்து மதிப்பிட்டதே எடப்பாடி பழனிசாமியின் இன்றைய நிலைக்கு கார ணம் என்றும் குறிப்பிட்டார். பெரும்பான்மை கிடைக்காத போது தவெக எங்களையும் அணுகியது என்றும், அதிமுகவுக்கு தவெக மூலம் பதிலடி கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.