முந்தய பக்கம்

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மரியாதை!

20 May 2026, 11:04 pm
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:  முதலமைச்சர் விஜய் மரியாதை!
<p><strong>பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மரியாதை!</strong></p><p>சென்னை, மே 20 - பண்டிதர் அயோத்திதாசரின் 181-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளா கத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்ச ர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாளையொட்டி, வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனை களை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர்,” என்றும்; “சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, ‘தமிழன்’, ‘திராவிடன்’ ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்தி தாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்!” என்று கூறியுள்ளார். </p>
Share
FacebookXWhatsAppTelegram