காவிரி - மேகதாது விவகாரம் ஆக. 3-இல் கர்நாடக முதல்வரை சந்திக்க முதல்வர் விஜய் முடிவு!
24 Jul 2026, 9:12 pm
<p><strong>காவிரி - மேகதாது விவகாரம் ஆக. 3-இல் கர்நாடக முதல்வரை சந்திக்க முதல்வர் விஜய் முடிவு!</strong></p><p>கும்பகோணம், ஜூலை 24 - மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை ஆகஸ்ட் 3 அன்று நேரில் சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முடி வெடுத்துள்ளார். கடந்த ஜூலை 20 அன்று, முதல மைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரி விவகாரம் குறித்து, முதலமைச்சர் ஒரு வாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தின் 53 ஆவது கூட்டம், கடந்த ஜூலை 22 அன்று நடைபெற்றது. அப்போது, ஜூன் - ஜூலை மாதங்களில் கர்நாடகாவில் பருவ மழை குறைவாக இருந்ததால், அணை களில் உள்ள நீர் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருப்பதாக வும், தமிழ்நாட்டிற்கு பாசன நீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கும்ப கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், “மேக தாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை முறியடிக்கவும், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறவும் முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து வலி யுறுத்துவார்” என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 அன்று, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, கர்நாடக முதல மைச்சரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</p>
