தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

14 Jul 2026, 9:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தாய்மாமன் மோதிரம் திட்டம் தங்கம் கொள்முதலுக்கு அரசு டெண்டர்

சென்னை, ஜூலை 14 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது, அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை 22 கேரட் (916 ஹால்மார்க்) தரத்தில் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஜூலை 14 செவ்வாய்க் கிழமை முறைப்படி டெண்டர் வெளியிட்டுள்ளது. நிறுவ னங்கள் ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார் களின் குழந்தைகளுக்கு, தமிழர் பாரம்பரியத்தில் உள்ள “தாய்மாமன் சீர்” மரபின்படி, முதலமைச்சர், தாயின் சகோதரர் பங்கை ஏற்று ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ், முதலமைச்சரின் பிறந்த நாளான 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு கல்லூரி ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாறுதல்

சென்னை: அரசு கல்லூரி ஊழியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்கக ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 15 முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், டி பிரிவு தவிர்த்த ஆசிரிய ரல்லாப் பணியாளர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக மோசடி: 5 பேர் கைது

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையின ரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 2 இளைஞர்களி டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி, அங்கு அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த சசிகுமார் உள்ளிட்டோர் ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படை யில் சசிகுமார் உட்பட 5 பேரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படித்து முடித்தும் வேலை இல்லாமல் இருக்கும் இளை ஞர்களைக் குறிவைத்து இதுபோன்ற வேலைவாய்ப்பு மோச டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த மோசடி யில் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா, இதன் பின்ன ணியில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித் தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை வரை வெப்ப அலை வீசும்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 16 வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை போன்ற சூழல் மற்றும் அதிகப்படியான ஈரப்பதத் துடன் கூடிய வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வேலூர், மதுரை, திருப்பத்தூர், சென்னை (மீனம் பாக்கம்) உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கவோ அல்லது தாண்டவோ வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததாலும், போதுமான மேக மூட்டம் இல்லாததாலும் இந்த வெப்ப மான சூழல் நீடிப்பதாக விளக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்? அமலாக்கத் துறை விசாரணை

சென்னை, ஜூலை 14 - முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ. 35 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் எனக் கூறப்படும் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. இதற்கிடையில், தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மதுரையை சேர்ந்த 4 பேரிடம் திருவல்லிக் கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்

சென்னை, ஜூலை 14 - மதுரையில் 26 ஆண்டுகளில், முதல் முறையாக ஜூலை மாதத்தில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதி வாகியுள்ளது. மதுரை விமான நிலைய பகுதி வரலாற்றில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கரூர் இனாம் நிலம் பத்திரப் பதிவு தடை விதிக்க மறுத்துவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை, ஜூலை 14 - கரூர் மாவட்டத்தில், கோயில்களின் பெயரில் தவறுதலாக பதிவான 15 கிராமங்களைச் சேர்ந்த 3,084 ஏக்கர் இனாம் நிலங்களை, அதன் உரிமையாளர்கள் பத்திரப்பதிவு செய்வ தற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தடையை விலக்கி தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தர விட்டது. இந்நிலையில், இந்த நிலங்கள் கோயில் நிலங்கள் என்றும், எனவே, 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு, நீதி பதிகள் சி.வி. கார்த்திகே யன், சக்திவேல் ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, எந்த விதி யின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என பதிலளிக்குமாறு இந்துசமய அறநிலையத் துறை உத்தரவிட்ட நீதிபதிகள், அதேநேரம் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய லாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டனர்.

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 14- ஆவின் பால் கொள் முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தர விட்டுள்ளார். தனியா ருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.