717 டாஸ்மாக் கடைகள் மூடல்?: முதல்வர் அவசர ஆலோசனை
3 Jun 2026, 9:28 pm

717 டாஸ்மாக் கடைகள் மூடல்?: முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை, ஜூன் 3 - தமிழக முதலமைச்சராகப் பொறுப் பேற்றவுடன், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டருக்குள் இயங்கும் 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதற்கான இரண்டு வாரக் கெடு கடந்த மே 28ஆம் தேதியோடு முடிவ டைந்த நிலையில், கள நிலவரம் குறித்தும் டாஸ்மாக் நிர்வாகத்தில் எழுந் துள்ள புகார்கள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் புதனன்று (ஜூன் 3) அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், உள் துறைச் செயலாளர் மணிவாசகன், டாஸ் மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற னர். மூடப்பட வேண்டிய 717 கடைகளில் இதுவரை 462 கடைகள் மட்டுமே முழு மையாக மூடப்பட்டு உள்ளதாகவும், மீத முள்ள கடைகளை மூடுவதில் நிர்வாக ரீதியான குளறுபடிகள், தாமதங்கள் நேர்ந்துள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், கட்டட உரி மையாளர்களும் தங்களுக்குரிய விளக் கங்களைக் கேட்டு கேள்விகள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.