காவல் நிலையத்தில் முதல்வர் ஆய்வு
4 Nov 2026, 12:33 am

காவல் நிலையத்தில் முதல்வர் ஆய்வு

கோவை, நவ.3-கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாயன்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் செவ்வாயன்று பங்கேற்றுவிட்டு, முதல்வர் காரில் கோவை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார். வழியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அவரது வாகனம் திடீரெனத் திரும்பியது. காவல் நிலையத்துக்குள் சென்ற முதல்வர், காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அங்கிருந்த காவலர்களிடம் பணிச் சூழல் குறித்தும், தேவைகள் மற்றும் குறைகள்குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் குற்றப் பதிவேடுகள், தினசரி பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார் மனுக்கள் குறித்த விவரங்களையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.சுமார் 15 நிமிடங்கள் அங்கு பணிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை விமானநிலையம் சென்றார். இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல காவல் தலைவர் (ஐ.ஜி.) ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.