குடிசைகள் இல்லா நகரங்கள்: முதல்வர் விஜய் ஆலோசனை!
17 Jul 2026, 9:16 pm
<p><strong>குடிசைகள் இல்லா நகரங்கள்: முதல்வர் விஜய் ஆலோசனை!</strong></p><p>சென்னை, ஜூலை 17 - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி களுடன் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 2031ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் குடிசைப் பகுதிகளே இல்லாத நகரங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, ஒற்றைச் சாளர முறை யில் கட்டட அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார், நிதியமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாத இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>
