தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்! எஸ்எப்ஐ தலைவர்களிடம் முதலமைச்சர் விஜய் உறுதி

18 May 2026, 9:05 pm
இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்! எஸ்எப்ஐ தலைவர்களிடம் முதலமைச்சர் விஜய் உறுதி

இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்! எஸ்எப்ஐ தலைவர்களிடம் முதலமைச்சர் விஜய் உறுதி

சென்னை, மே 18 - இருமொழிக் கொள்கையில் தமது அரசு உறுதியாக உள்ளது என்று, இந்திய மாணவர் சங்கத் தலைவர்களிடம், தமிழ்நாடு முத லமைச்சர் சி. ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ச. ஜோசப் விஜய்யை, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள் சந்தித்தனர்.

சென்னை தலைமைச் செயல கத்தில், திங்கட்கிழமை (மே 18) அன்று நடைபெற்ற முதல்வர் உடனான இந்தச் சந்திப்பில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் தலைமை யில் மத்தியக் குழு உறுப்பினர்கள் ஜி.கே. மோகன் சௌமியா, ஆனந்த், வடசென்னை மாவட்டத் தலைவர் மோகன கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்கள், இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், தமிழ்நாடு முழுவதும் நிலவும் கல்வி நிலை யங்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத் தும் விரிவாக உரையாடினர்.

“மாணவர்களின் பிரதான பிரச்ச னைகளில், உங்கள் தலைமையிலான அரசு உடனடியாக தலையீடு செய்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டனர். 29 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை யும் முதலமைச்சரிடம் அளித்தனர். முதலமைச்சர் உடனான இந்தச் சந்திப்புக்கு பிறகு சட்டமன்றப் பேரவை வளாகத்திற்கு வெளியே, இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது செய்தியாளர் களைச் சந்தித்தார்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

அப்போது, “புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக முத லமைச்சரை நேரில் சந்தித்து உரையாடி னோம். முதலமைச்சருடனான இந்தசந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என்றார்.“இந்திய மாணவர் சங்கத்தின் கோரிக்கை களை கவனமாக கேட்டறிந்த முத லமைச்சர், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேவைப்படும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தி கொடுக்கப்படும், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலி யாக உள்ள அனைத்து பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதற்கும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தவும் உரிய முறையில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மாணவியர்க்கு மாதந்தோறும் நாப்கின்

அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவியர்க்கு மாதந்தோறும் நாப்கின் வழங்குவது உறுதிப்படுத்தப்படும்; முறையான அடிப்படை வசதிகள் மற்றும் நாப்கின் எரியூட்டப்படும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை தடைபடாமல் ஆண்டுதோறும் நடை பெறுவது உறுதி செய்யப்படும் என்றார்.

மாணவர் பேரவை தேர்தலுக்கு குழு

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துவ தற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

உரிய துறையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

விடுதி உணவுப்படி உயர்வுக்கு ஒப்புதல்

கல்வி நிறுவனங்களில் சாதிக்கு எதிரான மாணவர்களின் மனநிலையை வளர்ப்பதற்கு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். கல்லூரி மாணவர் விடுதிகளில் தினசரி வழங்கப்படும் உணவுப்படியை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அதையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்த அரசு உறுதியாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு, தனது தலை மையிலான அரசு இரு மொழிக் கொள்கை யில் உறுதியாக உள்ளது என்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

எப்போதும் அரசோடு பேசலாம்: முதலமைச்சர் உறுதி

மேலும், அடிக்கடி மாணவர் பிரச்சனை கள் சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் சந்தித்து தெரிவிக்கலாம் என்றும் எந்த நேரமும் இந்த அரசோடு பேசலாம் என்றும் உறுதிபட முதலமைச்சர் தெரிவித்ததாகவும் சம்சீர் அகமது கூறினார்.

பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சம்சீர் அகமது, “ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையை இந்த அரசு அமல் படுத்தும் என்று முதலமைச்சர் ஒருபோதும் கூறவில்லை. எனவே, தேசியகல்விக் கொள்கையை இந்த அரசும்முதலமைச்சரும் ஏற்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும்” தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.