தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சபரிவர்மன் குடும்பத்திற்கு நிவாரணம் முதலமைச்சருக்கு வணிகர் பேரவை நன்றி

yesterday
சபரிவர்மன் குடும்பத்திற்கு நிவாரணம்  முதலமைச்சருக்கு வணிகர் பேரவை நன்றி
<p><strong>சபரிவர்மன் குடும்பத்திற்கு நிவாரணம் முதலமைச்சருக்கு வணிகர் பேரவை நன்றி</strong></p><p>சென்னை, ஜூலை 19- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சபரி வர்மன் சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரண நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முதல மைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நன்றி தெரி வித்துள்ளது. இதுகுறித்து பேரவையின் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக் கையில், மரணமடைந்த சபரிவர்மன் குடும் பத்திற்கு உரிய நீதி, நிவாரணம், அரசு வேலை மற்றும் நிரந்தர வீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அரசிடம் மனு அளிக்கப்பட்டி ருந்தது. அந்த மனுவை உடனடியாக பரி சீலித்து, சபரிவர்மன் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒரு வருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை மற்றும் நிரந்தர குடியிருப்பிற்காக அரசு வீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டது மனிதநேய மான நடவடிக்கையாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகை யில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு, எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து செயல்படும் அரசின் மக்கள் நலப் பணியை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், சமூக அமைப்புகளின் நியாயமான கோரிக்கை களுக்கு அரசு செவிசாய்த்திருப்பதற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.