சிதம்பரம் மாணவிக்கு தமிழக முதல்வர் பாராட்டு
5 Nov 2026, 11:56 pm

சிதம்பரம் மாணவிக்கு தமிழக முதல்வர் பாராட்டு

சிதம்பரம், நவ.5-கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று, கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பா. அலமேலுவுக்கு தமிழக முதல்வர் விஜய் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இவர் வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கணினிப் பயன்பாடுகள் ஆகிய நான்கு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

சென்னை நீலாங்கரை யில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் விஜய்,மாணவி அலமேலுவுக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி யில் மாணவியின் தந்தைபாலமுருகன் மற்றும் தாயார்கலந்து கொண்டனர்.