முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கான புதிய திட்டங்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம்
15 Jul 2026, 1:35 am

முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் ரூ.3 கோடிக்கான புதிய திட்டங்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம்

சென்னை,ஜூலை 14- பெரம்பூரில் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றும் வகையில், முதல்வர் விஜய் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 கோடியை ஒதுக்கியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்றைய தினம் தனது சொந்த தொகுதியான சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருக்கான அலுவலகத்தை திறந்து வைத்த பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கினார்.

மேலும், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான தனது பரிந்துரை கடிதத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனிடம் முதல்வர் வழங்கி திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வர் அளித்துள்ள பரிந்துரை கடிதத்தின்படி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7 திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் 3 கோடி ரூபாயை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பெண்களின் பாதுகாப்புக்கான மேம்பாட்டு திட்டம், 50 லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் Wifi வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், ஆறு பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.

அந்த பேருந்து நிறுத்தங்களை பொறுத்தவரை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து நிலையம், சிட்கோ நகர், எஸ்.எஸ்.எம் நகர், எம்.கே.பி நகர், வியாசர்பாடி மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் தலா ஒரு புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

மேலும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் 50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் நூலகம் மற்றும் கல்வி மையம் அமைக்க 50 லட்சம் ரூபாயும், 25 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கிரிக்கெட் மைதானம், கபடி மற்றும் கூடை பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பிரத்யேக மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சத்தியமூர்த்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டயாலிசிஸ் பிரிவு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தற்காலிக பணியாளர்களுக்கான ஓய்வு அறை மற்றும் அங்கன்வாடிகளுக்கு தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவிட்டுள்ளதன்படி இந்த அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.