பெண்கள் பாதுகாப்பை 100 சதவிகிதம் உறுதிப்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!
30 Jun 2026, 9:12 pm

பெண்கள் பாதுகாப்பை 100 சதவிகிதம் உறுதிப்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்!

சென்னை, ஜூன் 30 - பெண்கள் பாதுகாப்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சித் தலை வர்கள், காவல்துறை அதிகாரிகளுக் கான மாநாடு தலைமைச் செய லகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையில், செவ்வாயன்று 2-ஆவது நாளாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “பெண்கள் பாது காப்பு விஷயத்தில் மாற்றமோ சம ரசமோ இருக்கக் கூடாது; மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் இதற்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்; அதேபோல, மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடை களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; போதைப்பொருள் குற்றங் களில் ஈடுபடுவோ ரை உடனடி யாகக் கைது செய்வ தோடு, அவர் களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

நில தகராறு, மணல் கொள்ளை தமிழ்நாட்டின் ஊரகப் பகுதி களில் நடக்கும் பெரும்பாலான காயப் படுத்தல் மற்றும் கொலை வழக்கு களுக்கு நிலத் தகராறுகளே முதன்மை காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், மாவட்ட அளவில் நில வழக்கு தீர்வுக் குழுக்களை இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தப் படுவதையும், கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படு வதையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், காவிரி, வைகை உள்ளிட்ட ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சைபர் மோசடி குற்றங்கள் புயல், வெள்ளம் மற்றும் மலைப்பகுதி அபாயங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் பேரிடர் தயார்நிலை குறித்து கட்ட மைக்கப்பட்ட தணிக்கை நடத்த வேண்டும் என்றும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழைக்கு முன் மீட்பு உள்கட்டமைப்பு தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை இலக்கு வைத்து நடக்கும் டிஜிட்டல் கைது மற்றும் ஓடிபி மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சைபர் குற்ற காவல் நிலையங்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அனைத்து மாவட்ட ஆட்சி யர்களும், காவல் கண்காணிப்பாளர் களும் உண்மையாகவும் நேர்மை யாகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், அனைவருக்கும் தனது வாழ்த்து களைத் தெரிவித்தார்.