தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை: முதல்வர் உத்தரவு!

25 May 2026, 9:31 pm
கடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை: முதல்வர் உத்தரவு!

கடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை: முதல்வர் உத்தரவு!

சென்னை, மே 25 - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங்குற்றச் செயல்களில் ஈடு படுவோர் மீது எவ்விதத் தாமதமும் இன்றி துரிதமாக வழக்குகளைப் பதிவு செய்து, விரைவாக விசாரணை நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித் துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை, திங்க ளன்று (மே 25) முதலமைச்சர் நடத்தி னார்.

தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள்துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணி வாசன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத் தோர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) முனைவர் மஹேஷ்வர் தயாள், காவல்துறை கூடு தல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹூசைன், காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) சி. ராஜேஸ்வரி, காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) அஸ்ரா கார்க், காவல் துறை தலைவர் (சிங்கப்பெண்) கே. பவானீஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாலியல் குற்றங்கள், வழக்கு விரைவுபடுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன குறித்து விரி வான ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், பாலியல் வன்கொலை குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் மிக விரைவாக விசாரணை நடத்தி கடுமையான தண்ட னையைப் பெற்றுத் தருவதை அரசு அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

வழக்கினை முறை யாக நடத்தி கடும் தண்டனை வாங்கித் தருவது, குற்றச் செயல்களில் ஈடு படத் திட்டமிடுவோரைத் தடுக்கும் வித மாகவும் நடவடிக்கைகள் இருக்க வேண் டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைச் சீராகப் பராமரிப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராகவும் காவல் துறை எவ்வித சமரசமும் இன்றி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப் பதில் எவ்விதத் தொய்வும் இருக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.