முந்தய பக்கம்

முதலமைச்சர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது!

yesterday
முதலமைச்சர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அதிகாரப் பங்கீட்டு உரிமைகடுமையாகப் பாதிக்கப்படுவ தோடு, நாடு முழுவதும் சிறுபான்மை வாக்காளர்கள் செல்வாக்கு செலுத்தும்தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள களைவாணர் அரங்கத்தில் தொடங்கியது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 17 எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் திமுகவின் 30 எம்.பி.க்கள், அதிமுகவின் 4 எம்.பி.க்கள், பாமகவின் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், தேமுதிக சுதீஷ் ஆகியோர் பங்கேற்கவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram