தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முறையீடு

27 May 2026, 8:43 pm
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முறையீடு

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முறையீடு

சென்னை, மே 27 - தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், முதன்முறையாக பிர தமர் நரேந்திர மோடியை, புதுதில்லி சென்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நடை பெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பில், தமிழகத்தின் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமரிடம், முதலமைச்சர் விஜய் விரிவாக எடுத்துரைத்தார்.

ஆனைமங்கலச் செப்பேடுகள்

நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின் போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் விஜய், பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்

மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சி களின் தொடக்கத்திலேயே பாடப்பட்டு வருகிறது. ஆனால், உள்துறை அமைச்சகம் இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட குறிப்பாணை யைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் மாநில வாழ்த்துப்பாடலை தொடக்கத் தில் பாடுவது தொடர்பாக உரிய தெளி வுரையை வழங்குமாறு முதல்வர் விஜய் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

வான்வழி அமைப்பு மையம்

மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம், வான்வழி அமைப்பு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேகதாது அணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமிபூஜை யை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இது தமிழ்நாட்டு விவசாயி களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச் சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறி வுறுத்துமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.