முந்தய பக்கம்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் - ப.சிதம்பரம் சந்திப்பு

2 Jun 2026, 9:32 pm
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் - ப.சிதம்பரம் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் - ப.சிதம்பரம் சந்திப்பு

சென்னை, ஜூன் 2 - தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது இருவரும் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சருக்கு ப.சிதம்பரம் நினைவுப் பரிசும் வழங்கினார். தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வரும் நிலையில், அமைச்சர வையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தச் சூழலில் நடைபெற்றுள்ள ப.சிதம்பரத்தின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இதேநாளில் தென்னிந்திய பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரியும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார்.

மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கோரி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ப.சிதம்பரத்தின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram